Monday, 2 May 2011

சிந்திக்கப்படவேண்டிய பழங்கால இலக்கியத்தில் ஒன்று.பட்டினத்தார் அருளிய மானுடப் பிறப்பின் தத்துவம்

(சற்று சிந்தித்துப் பாருங்கள், வாழ்க்கையின் சில இரகசியங்கள் புரியும்)

''ஒருமட மாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம்தரும்
அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊறுசுரோணிதம் மீதுகலந்து

பனியில் ஓர்பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து
புகுந்துதிரண்டு பதும்அரும்பு கமடம் இதென்று
பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற -

உருவமுஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும்ஒன்றும்
நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து -

மகளீர்கள் சேனை தரவணையாடை மண்படஉந்தி
உதைத்துக் கவிழிந்து மடமயில்கொங்கை அமுதம்அருந்தி
ஓரறிவு ஈரறிவு ஆகிவளர்ந்து -

ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட
வந்துவாழ்ந்து மடியில்இருந்து மழலைமொழிந்து
வாஇரு போவென நாமம்விளம்ப -

உடைமணி ஆடை அரைவடம் ஆடஉண்பவர் தின்பவர்
தங்களொடு உண்டு தெருவில் இருந்துபுழுதி அளைந்து
தேடிய பாலரொடு ஓடிநடந்து
அஞ்சுவயதாகி விளையாடியே -

உயர் ஞான குருஉபதேசம் முத்தமிழின்கலையும்
கரைகண்டு வளர்பிறை என்றுபலரும் விளம்ப
வாழ்பதினாறு பிராயமும் வந்து -

மயிர்முடிகோதி அறுபதநீல வண்டிமிர் தண்கொடை
கொண்டைபுனைந்து மணிபொன்இலங்கும்பணிகள் அணிந்து
மாகதர் போகதர் கூடிவணங்க -

மதனசொரூபன் இவன்என மோக மங்கையர்கண்டு
மருண்டு திரண்டு வரிவிழிகொண்டு சுழியஎறிந்து
மாமயில்போல் அவர்போவது கண்டு -

மனதுபொறாமல் அவர்பிறகோடி மங்கல செங்கல்
சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடிய மாமுதல் சேரவழங்கி -

ஒருமுதலாகி முதுபொருளாய் இருந்த தனங்களும்
வம்பில்இழந்து மதனசுகந்த விதனம், இதென்று
வாலிப கோலமும் வேறு பிரிந்து -

வன்மையும்மாறி இளமையும்மாறி வன்பல்விழுந்துஇரு
கண்கள்இருண்டு வயதுமுதிர்ந்து நரைதிரைவந்து
வாதவிராத குரோதம் அடைந்து
செங்கையினில் ஓர்தடியும் ஆகியே -

வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி
குந்திநடந்து மதியுறம் விருந்து செவிதிமிர்வந்து
வாயறியாமல் விடாமல்மொழிந்து -

துயில்வரும் நேரம் இருமல் பொறாதுதொண்டையும்நெஞ்சும்
உலர்ந்துவறண்டு துகிலும் இழந்துசுணையும் அழிந்து
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு

கலியுகமீதில் இவர்மரியாதை கண்டிடும்என்பவர்
சஞ்சலம் மிஞ்சகலகல என்றுமலசலம்வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து -

தெளிவும்இராமல் உரைதடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
உலைந்துமருண்டு திடமும் உலைந்து மிகவும் அலைந்து
தேறிநல் ஆதரவு ஏதெனநொந்து -

மறையவன்வேதன் எழுதியவாறு வந்ததுகண்டமும்
என்றுதெளிந்து இனிஎனகண்டம் இனியெனசொந்தும்
மேதின வாழ்வு நிலாதினி நின்ற -

கடன்முறை பேசும்என உரைநாவுறங்கி விழுந்துகை
கொண்டுமொழிந்து கடைவழிகஞ்சி ஒழுகிடவந்து
பூதமும் நாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும்நேரமே -

வளர்பிறைபோல எயிறும்உரோமமும் சடையும்சிறு
குஞ்சியும்விஞ்ச மனதும் இருண்ட வடிவும்இலங்க
மாமலைபோல் யமதூதர்கள் வந்து -

வலைகொடுவீசி உயிர்கொடுபோக மைந்தரும்வந்து
குனிந்தழநொந்து மடியில்விழுந்து மனைவிபுலம்ப
மாழ்கினரே இவர்காலம் அறிந்து -

பழையவர்காணும் எனுமயலார்கள் பஞ்சுபறந்திட
நின்றவர்பந்தர் இடுமெனவந்து பறையிடமுந்த
வேபிணம்வேக விசாரியும் என்று -

பலரையும்ஏவி முதியவர்தாமிருந்த சவம்கழுவும்
சிலரென்று பணிதுகில்தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை -

வரிசை கெடாமல் எடுமெனஓடி வந்திளமைந்தர்
குனிந்துசுமந்து கடுகிநடந்து சுடலை அடைந்து
மானிடவாழ்வென வாழவெனநொந்து -

விறகிடைமூடி அழல்கொடுபோட வெந்துவிழுந்து
முறிந்துநிணங்கள் உருகிஎலும்பு கருகிஅடங்கி
ஓர்பிடிநீறும் இலாதஉடம்பை -
நம்பும் அடியேனை இனி ஆளுமே!''
- பட்டினத்தடிகளார் -

1 comment: